தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து! சாலையோரம் நின்ற 7 பேர் மரணம்..நடுங்க வைத்த சம்பவம்
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாநகர பேருந்து தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்தியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
7 பேர் பலி
மராட்டிய மாநிலம் மும்பையின் எஸ்ஜி பார்வே மார்க் பகுதியில், மாநகர பேருந்து ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது.
தாறுமாறாக ஓடிய பேருந்து சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதியது. இதில் 7 பேர் பலியாகினர் மற்றும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார், சம்பவ இடத்திற்கு விரைந்து பேருந்தை இயக்கிய சாரதி சஞ்சய் மோரை (50) கைது செய்தனர்.
பிரேக் பிடிக்காததால்
பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியபோது, ‘பேருந்தில் பிரேக் பிடிக்காததால் விபத்து நடந்தது’ எனக் கூறியுள்ளார்.
ஆனால், பேருந்து விபத்தை நேரில் பார்த்தவர்கள் குறித்த சாரதி மதுபோதையில் இருந்ததாக குற்றம்சாட்டினர்.
இதனையடுத்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்க அம்மாநில முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.