;
Athirady Tamil News

கடலுக்கு செல்லவேணடாம்; மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு

0

புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரையான கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலத்திற்கு நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த தாழ்வு மண்டலம் மேற்கு வடமேற்கு திசையில், இலங்கையின் வடக்கு கரையை அண்மித்து தமிழகத்தை நோக்கி நகரக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.