;
Athirady Tamil News

உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமில்லை : அறிவித்த ஐரோப்பிய நாடு

0

உக்ரைனுக்கு (Ukraine) படைகளை அனுப்பும் திட்டம் எதுவும் போலந்துக்கு (Poland) இல்லை என அந்நாட்டு பிரதமர் டொனால்ட் தஸ்க் (Donald Tusk) தெரிவித்துள்ளதாக சர்வேதச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த விடயத்தை வார்சாவுக்குச் சென்றிருந்த பிரான்ஸ் (France) ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் (Emmanuel Macron) நடந்த ஊடக சந்திப்பின் போது பிரதமர் தஸ்க் தெரிவித்துள்ளார்.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் போர் நிறுத்தம் மற்றும் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டால் ஐரோப்பிய துருப்புக்களை உக்ரைனுக்கு அனுப்பும் யோசனை அவர்களின் திட்டத்தில் இருக்கும் என்று முக்கிய அதிகாரிகள் தரப்பு ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

அமைதிக்காக விட்டுக்கொடுப்பு
இந்தநிலையிலேயே தற்போதைய சூழலில் உக்ரைனுக்கு இராணுவத்தை அனுப்பும் திட்டமேதும் போலந்துக்கு இல்லை என்பதை பிரதமர் தஸ்க் விளக்கியுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி மேக்ரான் மேலும் தெரிவிக்கையில், அமைதிக்காக என்ன விட்டுக்கொடுப்புகளை செய்ய வேண்டும் என்பதை உக்ரைன் தான் முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனாதிபதி
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பொறுப்புக்கு வரவிருக்கும் டொனால்ட் ட்ரம்பிடம் தெரியப்படுத்தவும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிரான்ஸ், ஜேர்மனி (Germany) மற்றும் போலந்தின் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர்களும் வியாழன் அன்று வார்சாவிலும் பெர்லினிலும் சந்திக்க உள்ளனர்.

மேலும், போலந்து மற்றும் பெர்லினில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் உடனடியாக உக்ரைனுக்கான நிதி மற்றும் இராணுவ ஆதரவை எவ்வாறு வலுப்படுத்துவது என்பது குறித்து ஆராயப்படும் என்றே தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.