;
Athirady Tamil News

நாம் இன்னும் தயாராகவே இல்லை… உலகப் போர் தொடர்பில் நேட்டோ தலைவர் எச்சரிக்கை

0

ரஷ்யாவுக்கு எதிரான போருக்கு நேட்டோ உறுப்பு நாடுகள் தயாராக வேண்டும் அல்லது, விளாடிமிர் புடின் அளிக்கும் அழுத்தத்தில் சிதறும் நிலை ஏற்படும் என அதன் தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யா 6 சதவிகிதம்

உறுப்பு நாடுகளை வலியுறுத்தியுள்ள நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே, பாதுகாப்புக்கு என அதிகமாக செலவிட வேண்டும் என்றார். என்ன நடக்க இருக்கிறதோ அதற்காக நாம் இன்னமும் தயாராகவில்லை என்றும் ரூட்டே குறிப்பிட்டுள்ளார்.

நேட்டோ உறுப்பு நாடுகள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவிகிதம் பாதுகாப்புக்காக செலவிட ஒப்புக்கொண்டனர், ஆனால் இது 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக அதிகரிக்க வேண்டும் என்று ரூட்டே வலியுறுத்தியுள்ளார்.

பாதுகாப்புக்கு என ரஷ்யா 6 சதவிகிதம் செலவிடும் போது பிரித்தானியா வெறும் 2.3 சதவிகிதம் மட்டுமே செலவிடுகிறது. பிரஸ்ஸல்ஸில் தனது முதல் உரையில், புதிதாக நியமிக்கப்பட்ட பொதுச்செயலாளர் ரூட்டே கூறுகையில், போர்க்கால மனநிலைக்கு நாம் திரும்ப வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்றார்.

பத்தாண்டுகளுக்கு முன்னர் பாதுகாப்புக்கு என நாம் செலவிட்டதைவிட தற்போது அதிகமாக செலவிட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார். ஆனால் நாம் இன்னும் பனிப்போர் காலத்தை விட மிகக் குறைவாகவே செலவிடுகிறோம் என்றார்.

போர்க்கால மனநிலைக்கு

பனிப்போரின் போது, ​​ஐரோப்பியர்கள் தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக பாதுகாப்புக்காக செலவிட்டனர். அதனால் பனிப்போரை வென்றோம்.

இரும்புத்திரை விழுந்த பிறகு செலவு குறைந்தது. உலகம் அப்போது பாதுகாப்பாக இருந்தது. தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்றார். உக்ரைனுடனும் நேட்டோ உறுப்பு நாடுகளுடனும் ஒரு நீண்ட காலத்திற்கான போருக்கு ரஷ்யா தாயாராகி வருகிறது.

நேச நாடுகளுக்கு எதிரான விரோத நடவடிக்கைகள் உண்மையானவை மற்றும் வேகமெடுத்து வருபவை. அட்லாண்டிக்கின் இருபுறமும் தீங்கிழைக்கும் இணையத் தாக்குதல்கள். பிரித்தானியா மற்றும் ஜேர்மன் மண்ணில் படுகொலை முயற்சிகள்.

நாம் போர்க்கால மனநிலைக்கு திரும்ப வேண்டியது அவசியம். இன்னும் நான்கைந்து வருடங்களில் வரப்போவதை எதிர்கொள்ள நாம் தயாராக இல்லை. ஆபத்து முழு வேகத்தில் நம்மை நோக்கி நகர்கிறது.

நாம் அதை திசைதிருப்பி விடுவதை விட அதை எதிர்கொள்ள வேண்டும் என்றார் ரூட்டே. பிரேசிலின் வாழும் நாஸ்ட்ராடாமஸ் என்பவர் உலகப்போர் தொடர்பில் தமது தீர்க்கதரிசனங்களை வெளிப்படுத்தியுள்ள நிலையிலேயே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே இந்த எச்சரிக்கைகளை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.