சென்னை நடுவானில் 2 விமானங்களில் தொழில்நுட்பக் கோளாறு : சென்றவர்கள் உயிர் தப்பினர்
சென்னையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 விமானங்களில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதையடுத்து 2 விமானங்களும் சென்னைக்கே திரும்பி வந்து தரையிறங்கின.
சென்னையில் இருந்து அதிகாலை 4.40 மணிக்கு மும்பைக்கு புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.
சென்னையில் இருந்து காலை 6.30 மணிக்கு கொச்சிக்கு புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் கோளாறு ஏற்பட்டது.
விமானிகள் சரியான நேரத்தில் கோளாறைக் கண்டுபிடித்ததால் 2 விமானங்களிலும் சென்றவர்கள் உயிர் தப்பினர். மும்பை விமானத்தில் சென்ற 168 பேரும், கொச்சி விமானத்தில் சென்ற 90 பேரும் உயிர்தப்பினர்.