பெரும் துயரத்தை ஏற்படுத்திய சகோதரிகளின் உயிரிழப்பு : தாய்,தந்தை படுகாயம்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதுவ மற்றும் இமதுவ நுழைவாயில்களுக்கு இடையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பயணம் செய்த கார் பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாதில் சகோதரிகள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை (matara)நுபே பகுதியைச் சேர்ந்த சதீஷா (12) மற்றும் அவரது ஒரே சகோதரி செனுதி தம்சரா (10) ஆகிய இருவருமே விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்த சிறுமிகளின் தாயும் தந்தையும் படுகாயமடைந்த நிலையில் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுகவீனத்திற்கு மருந்து எடுத்து திரும்பியவேளை சம்பவம்
உயிரிழந்த சிறுமிகளின் தாய் மாத்தறை சென் தோமஸ் பிரின்ஸ் கல்லூரியில் ஆங்கில ஆசிரியையாகவும், தந்தை வர்த்தகராகவும் உள்ளார்
விபத்தில் உயிரிழந்த மூத்த பெண் தனது சுகயீனத்திற்காக நாரஹேன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையில் வைத்தியரைப் பார்த்துவிட்டு மாத்தறையிலுள்ள வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.