உள்ளூர், இந்தியக் கலைஞர்கள் பங்கேற்கும் மார்கழி இசைவிழா
யாழ். இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக் கூடல் மற்றும் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் வருடாந்த மார்கழி இசை விழா எதிர்வரும் 27, 28, 29 ஆம் திகதிகளில் மாலை 5 மணி தொடக்கம் இரவு 9.30 மணி வரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளதாக யாழ்ப்பாண வணிகர் கழகத் தலைவர் இரத்தினலிங்கம் ஜெயசேகரன் தெரிவித்தார்
யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் இந்தியத் துணைத் தூதரகம், நல்லூர் சைவத் தமிழ்ப் பண்பாட்டுக் கலைக்கூடல் மற்றும் யாழ்ப்பாண வணிகர் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்த நிகழ்வில், உள்ளூர் மற்றும் இந்தியக் கலைஞர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. குறிப்பாக பிரபல இந்திய புல்லாங்குழல் வித்துவான் ஸ்ரீதர் தலைமையிலான “புல்லாங்குழல் இசை” நடைபெற உள்ளது. உள்ளூர் கலைஞர்களை ஊக்குவிக்கும் அதேநேரம்.அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கத்துடன் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், இலவசமாக நடத்தப்படும் இந்த நிகழ்வில் அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.