குரங்கு பிரச்சனைக்கு தீர்வாக , கருத்தடை
நாட்டில் பாரிய அனர்த்தமாக மாறியுள்ள குரங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிப்பதற்கான நிரந்தரத் தீர்வாக மாத்தளை, மேல் ஹரஸ்கம பிரதேசத்தில் இன்று (12) முன்னோடித் திட்டமான ஸ்டெரிலைசேஷன் கருத்தடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்னோடித் திட்டங்களுக்காக அரசாங்கம் 4.5 மில்லியன் ரூபாவைச் செலவிடவுள்ளதுடன், எதிர்காலத்தில் இந்தத் திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படும்.
மாத்தளை மாவட்டத்தில், பொறிகளைப் பயன்படுத்தி பிடிபடும் குரங்குகளை, கிரித்தலை விலங்குகள் நலன்புரி நிலையத்திற்குக் கொண்டு சென்று, கருத்தடை செய்யப்பட்டு, பிடிபட்ட பகுதிக்கே மீண்டும் விடுவிக்கப்பட உள்ளன.