;
Athirady Tamil News

விமானத்தில் இலவச Wi-Fi வழங்குவதாக அறிவித்துள்ள கனேடிய நிறுவனம்

0

கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும்.

ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

Air Canada, Air Canada Rouge மற்றும் Air Canada Express விமானங்களில் இந்த இலவச WiFi சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் சன் மார்க்கெட் பயணிகளுக்கு முதலில் இச்சேவை கிடைக்கும்.

இந்த இலவச WiFi சேவையைப் பெற அப்பயணி Aeroplan உறுப்பினராக இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அரோபிளான் உறுப்பினராக இல்லாத பயணிகள் இந்த சேவையை குறைந்த கட்டணத்தில் வாங்கி பயன்படுத்தலாம். ஆரோபிளான் உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் இலவசமாக பதிவு செய்ய முடியும்.

இந்த WiFi சேவை ஸ்ட்ரீமிங் தரத்துடன் வழங்கப்படும், இதனால் தொழில்துறையும் பொழுதுபோக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

2026-ஆம் ஆண்டு வரை இந்த சேவையை நீண்ட தூர சர்வதேச விமானங்களுக்கும் விரிவுபடுத்த ஏர் கனடா திட்டமிட்டுள்ளது.

ஜூலை மாதம், வெஸ்ட்ஜெட் நிறுவனமும் இதேபோல் தங்களது சில விமானங்களில் Starlink நவீன செயற்கைக்கோள் இணையத்தின் மூலம் இலவச WiFi சேவையை அறிவித்தது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.