பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆபத்து? பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் வலிநிவாரணியாக கொடுக்கப்படும் மாத்திரைகளில் முதலிடம் பாராசிட்டமால் மாத்திரைக்குத்தான்.
அதேபோல, தலைவலி, காய்ச்சல் என்பதும் உடனடியாக பார்மஸிக்குச் சென்று பாராசிட்டமால் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வோர் ஏராளம்.
ஆனால், சில தரப்பினருக்கு இந்த பாராசிட்டமால் மாத்திரைகளால் ஆபத்து என்கின்றன ஆய்வுகள்.
பிரித்தானியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தி
பொதுவாக வழக்கமாக பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் சிலருக்கு குடல் புண் இரத்தப்போக்கு, இதயப் பிரச்சினைகள் மற்றும் சிறுநீரகப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், சில தரப்பினருக்கு பாராசிட்டமால் மாத்திரை ஆபத்தை ஏற்படுத்தலாம் என்பதால் அவர்கள் அந்த மாத்திரையை தவிர்க்கவேண்டும்.
யாரெல்லாம் என்றால், உடல் எடை 50 கிலோவுக்குக் குறைவாக உள்ளவர்கள், கல்லீரல், சிறுநீரகப் பிரச்சினைகள் உடையவர்கள் மற்றும் ஒரு வாரத்துக்கு 14 யூனிட் ஆல்கஹால் அல்லது ஆறு கப் ஒயின் அருந்துபவர்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொள்வது ஆபத்து.
ஏற்கனவே ஆல்கஹால் கல்லீரலை பாதிக்கும் நிலையில், மேற்குறிப்பிட்ட அளவுக்கு ஆல்கஹால் எடுத்துக்கொள்பவர்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் ஆபத்துதான்.
ஆனால், வாரம் ஒன்றிற்கு பிரித்தானியர்கள் பலர் சராசரியாக 18 யூனிட் ஆல்கஹால் எடுத்துக்கொள்கிறார்கள்.
அப்படி பார்த்தால், பல மில்லியன் பிரித்தானியர்களுக்கு பாராசிட்டமால் குறித்த இந்த எச்சரிக்கை பொருந்தும்.
பாராசிட்டமால் ஏற்படுத்தும் அபாயங்கள் குறித்து மேலும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. என்றாலும், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் போன்ற நீண்ட கால பிரச்சினைகள் உடையவர்கள் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளும் விடயத்தில் கவனமாக இருப்பது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.