உலகப்போர் பதற்றம்., பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழிகளை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து திட்டம்
பனிப்போர் கால அணுசக்தி பதுங்கு குழி வலையமைப்பை புதுப்பிக்க சுவிட்சர்லாந்து திட்டமிட்டுள்ளது.
ரஷ்யா-உக்ரைன் போரின் பின்னணியில், உலகில் நிலவும் போர் சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து தனது பழமைவாய்ந்த பதுங்கு குழிகளை (nuclear bunkers) புதுப்பிக்க திட்டமிட்டுள்ளது.
1963 சட்டத்தின் கீழ், போர் சூழலில் குடிமக்களை பாதுகாபதில் சுவிட்சர்லாந்து ஏற்கனவே ஜேர்மனி போன்ற அண்டை நாடுகளை விட முன்னணியில் உள்ளது.
சுவிட்சர்லாந்தில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் உட்பட அதன் 9 மில்லியன் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அணு கதிர்வீச்சு மற்றும் குண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்து பாதுகாப்பாக தங்க பதுங்கு குழியில் ஒரு இடம் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.
எதிர்காலங்களில் 220 மில்லியன் சுவிஸ் பிராங்க் (250 மில்லியன் அமெரிக்க டொலர்) செலவில், இந்த தங்குமிடங்களை புதுப்பிக்கும் திட்டத்தில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
தற்போதைய பரிசோதனைகள்
இந்த பதுங்கு குழுக்களில் நடக்கும் 10 ஆண்டு கட்டாய பரிசோதனையின் ஒரு பகுதியாக, ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கீழ் ஒரு பதுங்கு குழியை சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அப்போது, தங்குமிடங்கள் பழுதடைந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கதவுகள் செயல்படாமல், குழிகளில் சாக்கடை ஏறக்கூடிய நிலைமையில் பல பிரச்சினைகள் இருந்தன.
இந்நிலையில், பழுதுகளை சரிசெய்ய ஒரு வருட அவகாசம் அல்லது பொதுத் தங்குமிடத்திற்கான தொகையை செலுத்த வேண்டிய நிலை உள்ளது.
சுவிட்சர்லாந்து 1815 முதல் நடுநிலையாக இருந்து வருகிறது. 2022ல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்குப் பிறகு, மக்களிடையே தங்குமிடங்கள் குறித்து கவலை அதிகரித்துள்ளது.
சிலர் தங்கள் தனியார் தங்குமிடங்களுக்கேற்ப மாற்றம் செய்துகொண்டனர், மற்றவர்கள் பொதுத் தங்குமிடங்களில் நுழைவு கோரிக்கை செய்தனர்.
தனியார் தங்குமிடங்கள் இல்லாதவர்களுக்காக கூட்டுத் தங்குமிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை தூய்மையாக பராமரிக்கப்படுகின்றன, அதில் படுக்கைகள், கழிப்பறைகள் மற்றும் மருத்துவ வசதிகளும் உள்ளன.