உக்ரேனிய மின் நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தும் ரஷ்யா
உக்ரேனிய மின் நிலையங்கள் மீது ரஷ்யா பாரிய அளவிலான ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.
உக்ரைனில் உள்ள மின் வசதிகளை இலக்காகக் கொண்டு ரஷ்யா பெருமளவிலான ஏவுகணை தாக்குதல்காலை நடத்திவருவதாக உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த தாக்குதலால் கருங்கடல் துறைமுக நகரமான ஓடெசா மற்றும் மேற்குப் பகுதிகளில் வெடிப்புகள் கேட்கப்பட்டுள்ளன.
ரஷ்ய படைகள், உக்ரைனின் மின் கட்டமைப்பை தகர்க்க கடந்த மாதங்களில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளன. இது கோடிக்கணக்கான மக்களுக்கு நீண்ட நேர மின்வெட்டுகளை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனில் தற்போது மீண்டும் அவசர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது புதிய சேதத்தால் ஏற்பட்டதா அல்லது முன்னெச்சரிக்கை நடவடிக்கையா என்பது தெளிவில்லை.
யாஸ்னோ மின்சார நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் பாதி பேர் மின்சாரமின்றி தவித்துள்ளனர்.
மேற்குப் பகுதிகளில் உள்ள Lviv மாநிலம், மின் நிலையங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாகவும், மின்வெட்டுகளின் கால அட்டவணை மாற்றப்படவேண்டும் எனவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், ரஷ்யா மின் நிலையங்கள் மீதான தாக்குதல்களை இராணுவ இலக்காகக் கருதுவதாகவும், குடிமக்களின் வசதிகளை அழிக்கும் நோக்கமில்லை என்று தெரிவித்துள்ளது.
அந்த வகையில், 2023-ல் 11 முறை மின்சார அமைப்புகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.
சமீபத்திய தாக்குதல்களில் உடனடி உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்பதுடன், மின்சார கட்டமைப்புகளில் ஏற்பட்ட சேதம் குறித்து முழுமையான விவரங்கள் இன்னும் வெளிவரவில்லை.