;
Athirady Tamil News

போருக்கு தயாராகும் பிரித்தானியா., போர்க்கப்பல்களில் பொருத்தப்படும் புதிய ரக ஏவுகணைகள்

0

பிரித்தானியாவின் HMS Portland போர்க்கப்பலில் புதிய ரக ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் ராயல் நேவி கப்பலான HMS Portland (Type 23 Frigate) தற்போது பழமைவாய்ந்த Harpoon ஏவுகணையை மாற்றியமைத்து, புதிய Naval Strike Missile (NSM) ஏவுகணை அமைப்பைப் பெற்றுள்ளது.

நார்வே நாட்டின் Kongsberg Defence & Aerospace (KDA) நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட Naval Strike ஏவுகணை, கடல் மற்றும் நிலத் தளங்களில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் வாய்ந்தது.

இந்த ஏவுகணையிலுள்ள புதிய தொழில்நுட்பம் எளிதில் எதிரி பாதுகாப்புகளை தகர்க்கும் திறன் கொண்டது.

இதிலுள்ள Autonomous Target Recognition (ATR) இலக்குகளை துல்லியமாக அடையும் திறன் கொண்டது.

இது Stealth எனப்படும் மறைந்திருந்து தாக்கக்கூடிய முறையில் செயல்பட வடிவமைக்கப்பட்டது.

இந்த ஏவுகணையை TDW நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த வெடிபொருள் பயன்படுத்தபட்டுள்ளது.

Naval Strike Missile சிறப்பம்சங்கள்:
3.96 மீட்டர் நீளம் மற்றும் 407 கிலோ எடையுள்ள இந்த ஏவுகணை 0.7–0.9 Mach வேகத்தில், 100 கடல் மைல் (185 கிமீக்கு மேல்) தொலைவிற்கு சென்று தாக்கக்கூடிய திறன் கொண்டது.

இந்த ஏவுகணை கடல் மற்றும் நில இலக்குகள் இரண்டையும் தாக்க பயன்படுத்தக்கூடியது.

இவ்வேவுகணை தற்போது பிரிட்டன் உட்பட நார்வே, போலந்து, அமெரிக்கா, ஜப்பான், மலேஷியா, அவுஸ்திரேலியா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளின் கடற்படைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

பிரித்தானியாவில் ராயல் நேவியின் Type 23 Frigates மற்றும் Type 45 Destroyers என மொத்தம் 11 கப்பல்களுக்கு NSM அமைப்பை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பிரித்தானியா இந்த புதிய ஏவுகணை அமைப்பின் மூலம் தற்காப்புத் திறனை மேம்படுத்துவதுடன், நாட்டின் போர் கப்பல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லை அடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.