உக்ரைனின் தாக்குதலில் ரஷ்ய ராணுவ வீரர் பலி: 17 ட்ரோன்களை அழித்ததாக பெல்கோரோட் தகவல்
ரஷ்யாவின் பெல்கோரோட் பகுதியில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிராந்திய பாதுகாப்பு வீரர்
மேற்கு பெல்கோரோட் பகுதியில் உக்ரேனிய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. இதில் ரஷ்ய பிராந்திய பாதுகாப்பு வீரர் ஒருவர் கொல்லப்பட்டார்.
டெரிப்ரெனோ கிராமத்தில் அவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேசிய பெல்கோரோட் ஆளுநர் Vyacheslav Gladkov இந்தத் தாக்குதலில் ஒரு பொது அமைப்பும் சேதமடைந்ததாக கூறினார்.
20 ட்ரோன்கள் அழிப்பு
ஆனால், கூடுதல் விவரங்களை வழங்கவில்லை. அத்துடன் பல பிராந்தியங்களில் கிட்டத்தட்ட 20 ட்ரோன்களை அழித்ததாக இராணுவம் தெரிவித்தது.
அவற்றில் பெல்கோரோட் பகுதியில் மட்டும் 17 ட்ரோன்கள் அழிக்கப்பட்டது என கூறப்பட்டுள்ளது.