;
Athirady Tamil News

நடிகர் அல்லு அர்ஜூனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்: நீதிமன்றம் உத்தரவு

0

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயிரிழந்த பெண்
சமீபத்தில் வெளியான புஷ்பா-2 திரைப்படத்தை பார்க்க சென்ற ரேவதி என்ற பெண், ரசிகர்களின் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து விபத்திற்கு காரணமாக அமைந்த நடிகர் அல்லு அர்ஜூன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

எனினும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து ரேவதி உயிரிழப்பு சம்பவத்தில் பொலிஸார் இன்று அல்லு அர்ஜூனை கைது செய்தனர்.

நீதிமன்ற காவல்
அவர் மீது தெரிந்தே மரணத்தை விளைவிக்கும் குற்றத்தில் ஈடுபடுதல், திட்டமிட்டு கொடும் காயத்தை ஏற்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர் அவர் நம்பள்ளி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால், அவர் மனுதாக்கல் செய்தது இன்று விசாரணைக்கு வரவில்லை.

இந்நிலையில், கைது செய்யப்பட்டுள்ள நடிகர் அல்லு அர்ஜூனை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.