யாழில் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் – வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பகுதிகளில் பரவிவரும் எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வீடுவீடாக சென்று எலிக்காச்சல் தடுப்பதற்க்காக விழிப்புணர்வு கருத்துக்களை மக்களுக்கு வழங்குவதுடன், தடுப்பு மருந்தாக doxicycline மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
எலிக்காச்சலை தடுக்கும் நடவடிக்கையில் , ஆம்பன் பிரதேச வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரி மருத்துவ கலாநிதி சிவசுதன் தலமையிலான குழுவினரே இவ்வாறு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேவேளை அண்மைய நாட்களாக வடமராட்சி பகுதியில் தொற்றுக்கு உள்ளான பலர் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் யாழ் மாவட்டத்தில், அண்மையில் 7 பேர் உயிர்ழந்த நிலையில் பரிசோதனையில் அவர்களுக்கு எலிக்காச்சல் இருந்தமை கணடுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.