சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிப்பு
கடந்த சில நாட்களாக ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 63 குடும்பங்களை சேர்ந்த 207 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த அனர்த்தங்களின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் எழு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்ததாக அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிக்கையிட்டுள்ளது.
அதிகபட்சமாக சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 38 குடும்பங்களை சேர்ந்த 135 பேரும் காரைநகர் பிரதேச செயலாளர் பிரிவில் 19 குடும்பங்களை சேர்ந்த 54 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.