;
Athirady Tamil News

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி போராட்டம்

0

யாழ்ப்பாணம் – தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையை அகற்றக்கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

தையிட்டியில் தமிழ் மக்களது காணிகளை இராணுவம் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து உரிய அனுமதிகள் எதுவுமின்றி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றி காணிகளை உரிமையாளர்களிடம் கையளிக்க வலியுறுத்தி கடந்த 18 மாதமாக தொடர்ந்த போராட்டம் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட அக்கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.