ஜேர்மனியில் முக்கியமான இடங்கள் மீது பறந்த மர்ம ட்ரோன்கள்
ஜேர்மனியில், ராணுவ தளங்கள் முதலான முக்கியமான இடங்கள் மீது ட்ரோன்கள் பறந்த விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று, அதாவது, வெள்ளிக்கிழமையன்று, ஜேர்மனியிலுள்ள முக்கியமான ராணுவ தளங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இருக்கும் இடங்களுக்கு மேலாக அடையாளம் தெரியாத ட்ரோன்கள் பறந்ததாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
அந்த இடங்களுள், ஜேர்மனியின் Rhineland-Palatinate மாகாணத்திலுள்ள Ramstein என்னுமிடத்திலுள்ள அமெரிக்க ராணுவ விமான தளமும் அடங்கும்.
இந்நிலையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸியிலும் இதேபோல் மர்மான முறையில் ட்ரோன்கள் பறந்தது தெரியவந்த நிலையில், அதனால் எந்த ஆபத்தும் இருப்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.