கடந்த 24 மணித்தியாலங்களில் சிரியாவை சரமாரியாக தாக்கிய இஸ்ரேல்!
சிரியாவில்(syria) கடந்த 24 மணித்தியாலங்களில் 61 ஏவுகணை தாக்குதல்களை இஸ்ரேல்(israel) முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்காரணமாக, சிரியாவின் தென்கிழக்கு பகுதியில் மின் இணைப்புகள் மற்றும் தொலைத்தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
இதேவேளை, இந்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரிய இராணுவ நிலைகள் மீதான தாக்குதல்
முன்னாள் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத் வெளியேற்றத்துக்கு பின், சிரியா மீது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு 80 சதவீத இராணுவ நிலைகளை அழித்ததாக தகவல் வெளியாகியது.
அந்த நாட்டில் உள்ள அபாயகரமான ஆயுதங்கள் கிளர்ச்சியாளர்களின் கையில் போவதை தடுக்கும் வகையில் கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் 400க்கும் மேற்பட்ட தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இதை இஸ்ரேலிய ராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த தாக்குதலில், சிரியாவின் இராணுவ தளவாடங்கள், முக்கிய கட்டடங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக, சிரியா நாட்டில் 80 சதவீத இராணுவ பொருட்கள் இந்த தாக்குதலில் அழிந்ததாக தகவல் வெளியாகின.