வாழைப்பழம் சாப்பிட சரியான நேரம் இதுவா? அவசியம் தெரிஞ்சுக்கோங்க
பொதுவாக மற்ற பழங்களை விட வாழைப்பழம் சந்தையில் எளிதாக கிடைக்கக்கூடியவை. தன்னுள் பல ஊட்டச்சத்துக்களை வைத்திருக்கும் வாழைப்பழங்களை பசியுடன் இருக்கும் பொழுது சாப்பிடலாம்.
உடனே உடலுக்கு தேவையான ஆற்றலை கொடுத்து நம்மை ஊக்கப்படுத்தும் பழமாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் தங்களின் உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்கள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
அதற்காக சிலர் ஒரே நாளில் 3 முதல் 4 வாழைப்பழங்களை கூட சாப்பிடுகிறார்கள். இப்படி எடுத்து கொள்வதிலும் பார்க்க வாழைப்பழங்களை மிதமான அளவில் உட்கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம்.
அளவுக்கு அதிகமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பதற்காகவே பலர் காலை எழுந்ததும் வாழைப்பழத்தை சாப்பிடுவார்கள். இருந்த போதிலும் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டாம் என பல சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
அந்த வகையில், காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட கூடாதவர்கள் யார் என்று தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
அசிடிட்டி மற்றும் வாயு தொந்தரவு பிரச்சினையுள்ளவர்கள் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனின் வெறும் வயிற்றில் சாப்பிடும் பொழுது ஏற்கனவே இருக்கும் வயிறு சார்ந்த பிரச்சனைகள் அதிகரிக்கலாம். உண்மையில் வாழைப்பழங்கள் கார்போஹைட்ரேட்டின் வளமான மூலமாகும்.
எனவே இவை சில நேரங்களில் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். மீறி சாப்பிட்டால் வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
இப்படியான பிரச்சினையுள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்று நினைத்தால், அதை மற்ற உணவுகளுடன் இணைத்து சாப்பிடுங்கள்.