;
Athirady Tamil News

மின்கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

மின்சாரக் கட்டணத் திருத்த யோசனைக்கான பொதுமக்களின் கருத்துக்களைப் பெறும் நடவடிக்கை இன்று (17) முதல் ஆரம்பிக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஜனவரி 08ஆம் திகதி வரை இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இது தொடர்பான கருத்துக்களை, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, 6ஆவது தளம், இலங்கை வங்கி வர்த்தகக் கோபுரம், கொழும்பு-03 என்ற முகவரி அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் ஊடாகவும் பொது மக்கள் அனுப்பலாம் அத்துடன், 076 42 710 30 என்ற வட்ஸ்அப் எண்ணிலும் நீங்கள் கருத்துகளையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிக்கலாம்.

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுக்கு வருகை தந்தோ அல்லது மாகாண மட்டத்தினால் ஒதுக்கப்பட்ட இடங்களுக்குச் சென்றோ கருத்துக்களைச் சமர்ப்பிக்க முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய வருடத்தில் முதல் ஆறு மாதங்களுக்கு மின் கட்டணத்தைத் திருத்தம் செய்யாமல் பராமரிக்க வேண்டும் என மின்சார சபை பரிந்துரைத்திருந்தது.

இதன்படி, குறித்த யோசனையை ஆணைக்குழுவால் மீளாய்வு செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்களின் கருத்துக்களுக்காக முன்மொழிவு அடங்கிய வரைவு காட்சிப்படுத்தப்படும்.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மின்சார கட்டண திருத்த யோசனை தொடர்பான இறுதித் தீர்மானம் எதிர்வரும் ஜனவரி மாதம் 17 ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.