யோஷித்த ராஜபக்ஷ ரகசிய போலீசார் விசாரணைக்காக அழைப்பு.. அவர் நாட்டில் இல்லை
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாவலரான நெவில் வன்னியாராச்சி ஆகியோர் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
ஆனால் இருவரும் நேற்று அங்கு வராததால் நேற்று அங்கு வர முடியாது என வழக்கறிஞர்கள் மூலம் தெரிவித்தனர்.
யோஷித ராஜபக்ஷ வெளிநாட்டில் இருப்பதாகவும், நெவல் வன்னியாராச்சி வெளிநாட்டில் தனிப்பட்ட பயணத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி சட்டத்தின் கீழ் சட்டவிரோதமாக சொத்து சேர்த்தது தொடர்பான விசாரணையின் போதான வாக்குமூலங்களை பதிவு செய்யவே குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.