பரவிவரும் புதிய அம்மை நோய்: ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல்
சமீப காலமாக பல நாடுகளில் பரவிவரும் குரங்கம்மை நோய் ஜேர்மனிக்குள்ளும் நுழைந்துள்ளது.
ஜேர்மன் பள்ளி ஒன்று மூடல்
ஜேர்மனியின் North Rhine-Westphalia மாகாணத்திலுள்ள பள்ளி ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு mpox அல்லது monkeypox என அழைக்கப்படும் குரங்கம்மை வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Rösrath என்னும் நகரில் வாழும் அந்தக் குழந்தைகளின் குடும்பத்தினரில் நான்கு பேருக்கு குரங்கம்மைத் தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் (quarantine).
பள்ளியில் பயிலும் இரண்டு மாணவர்களுக்கு குரங்கம்மை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
பிள்ளைகளுக்கு ஒன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரில் ஒருவர் சமீபத்தில் ஆப்பிரிக்காவுக்குச் சென்று திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கம்மைத் தொற்றியுள்ளது.
அவரிடமிருந்து அவரது குடும்பத்தினருக்கு வைரஸ் தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.