வெளிநாட்டில் அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட விவகாரம்… கைதான சுவிஸ் வம்சாவளி நபர்
ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது ஈரான் முன்னெடுத்த சக்திவாய்ந்த ட்ரோன் தாக்குதல் தொடர்பில் ஈரானிய வம்சாவளி அமெரிக்கரும் சுவிஸ் வம்சாவளி அமெரிக்கரும் கைதாகியுள்ளனர்.
அமெரிக்கப் படைகள் மீது
குறித்த இருவர் மீதும் ஈரானுக்கு முக்கியமான தொழில்நுட்பத்தை ஏற்றுமதி செய்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஈராக்கில் இருந்து செயல்படும் Islamic Resistance என்ற ஈரான் ஆதரவு அமைப்பே ஜோர்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் மீது கடந்த ஜனவரி மாதம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதில் மூன்று அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டதுடன், 47 பேர்கள் காயங்களுடன் தப்பினர். இந்த நிலையில், இந்த வழக்கு விசாரணையின் ஒருபகுதியாக பாஸ்டனில் உள்ள பெடரல் சட்டத்தரணிகள் Mohammad Abedini மற்றும் Mahdi Sadeghi ஆகிய இருவர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
அமெரிக்காவுக்கு அழைத்துவரும்
இதில் சுவிஸ் மற்றும் ஈரான் குடியுரிமை கொண்ட Abedini இத்தாலியின் மிலன் நகரில் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரானில் பிறந்து அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள Sadeghi-யும் கைதாகியுள்ளார்.
வெளியான தகவலின் அடிப்படையில் 2016 முதல் பல சந்தர்ப்பங்களில் அமெரிக்க தொழிநுட்பத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய Abedini-க்கு Sadeghi உதவியுள்ளார். தற்போது மிலன் நகரில் கைதாகியுள்ள Abedini-ஐ அமெரிக்காவுக்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.