;
Athirady Tamil News

டொலர் பணத்தாளில் இனி இந்த கனேடிய நட்சத்திரத்தின் புகைப்படம்

0

கனடாவில் புதிதாக வெளியிடப்படவிருக்கும் 5 டொலர் பணத்தாளில் மறைந்த Terry Fox புகைப்படம் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தனது 22வது வயதில்
பெடரல் அரசாங்கம் திங்கள்கிழமை தனது பொருளாதார அறிக்கையில் இந்த தகவலை வெளியிட்டது. கனேடிய நட்சத்திரமான Terry Fox கடந்த 1980ல் தனது மராத்தான் ஆஃப் ஹோப்பை நடத்தி புற்றுநோய் ஆராய்ச்சிக்காக பரப்புரை மேற்கொண்டார்.

புற்றுநோயால் தமது காலை இழந்தவர் Terry Fox. ஃபாக்ஸ் முன்னெடுத்த மராத்தான் ஊடாக மொத்தம் 24 மில்லியன் கனேடிய டொலர் தொகையை திரட்டியிருந்தார். அப்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் ஒரு கனேடியருக்கு 1 டொலர் என கணக்கிடப்பட்டது.

1981ல் அவரது புற்றுநோய் நுரையீரலுக்கு பரவிய நிலையில் தனது 22வது வயதில் அவர் மரணமடைந்தார். மிக இளம் வயதில் கனடாவின் உயரிய விருதான Companion of the Order of Canada-க்கும் தெரிவானார்.

ஃபாக்ஸ் தெரிவானார்
அவரது நினைவாக ஆண்டு தோறும் முன்னெடுக்கப்படும் மராத்தான் போட்டிகளால் இதுவரை 850 மில்லியன் கனேடிய டொலர் திரட்டப்பட்டுள்ளது. 2020ல் கனடா வங்கி முன்னெடுத்த 6 வாரங்கள் நீண்ட பொதுமக்கள் கருத்துக் கேட்கும் நிகழ்வில், இறுதி 8 பேர்களில் ஒருவராக ஃபாக்ஸ் தெரிவானார்.

மொத்தம் 600 பேர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டது. தற்போது 5 டொலர் பணத்தாளில் ஃபாக்ஸ் புகைப்படம் இடம்பெறுவதால், அவர் சார்பிலான சேவை நடவடிக்கைகளுக்காக மக்கள் 5 டொலர் தாள்களை நன்கொடை அளிப்பார்கள் என்று நம்புவதாக குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது 5 டொலர் தாளில் இடம்பெற்றுள்ள Sir Wilfrid Laurier இனி 50 டொலர் தாளில் இடம்பெறுவார் என்றே அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.