கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.
இன்று அதிகாலை கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக விபத்து ஏற்பட்டுள்ளது.
பேருந்தும் உழவு இயந்திரமும் மோதி விபத்து ஏற்பட்டதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்த மூன்று பேர் காயம் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.