எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் அனைத்து கல்வித் தகுதிகளும் இன்று பாராளுமன்றத்திற்கு!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது அனைத்து கல்வித் தகைமைகளையும் இன்று (டிசம்பர் 18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று அவர் இதனைத் தெரிவித்தார்.
“அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பட்டச் சான்றிதழை முன்வைக்குமாறு என்னிடம் கோரிக்கை விடுத்தார். நாளை காலை நான் இந்த சபையில் நான் பெற்ற அனைத்து கல்வித் தகுதிகளையும் முன்வைக்க உத்தேசித்துள்ளேன். அதைத் தாண்டிய அனைத்து சான்றிதழ்களையும் முன்வைக்கவுள்ளேன்” என்றார் சஜித் பிரேமதாச .