பிரித்தானியர்கள் அமெரிக்கர்கள் உட்பட 100,000 பேர்கள்… சிரியாவில் அசாத் ஆட்சியின் கொடூரங்கள் அம்பலம்
சிரியாவில் மிக சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட 100,000 உடல்கள் புதைக்கப்பட்டிருந்த விவகாரத்தில், பிரித்தானியர்களும் அமெரிக்கர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
5 கல்லறைகள்
இதேப்போன்று குறைந்தது 5 கல்லறைகள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிரிய மக்கள் மட்டுமின்றி, வெளிநாட்டவர்களும் படுகொலை செய்யபப்ட்டுள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது.
2011ல் உள்நாட்டுப் போர் வெடித்ததில் இருந்து சுமார் அரை மில்லியன் மக்கள் சிரியாவில் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.
டமாஸ்கஸின் வடக்கே கொத்தாக பலர் புதைக்கப்பட்டிருந்த கல்லறையில் 100,000 பேர்கள் வரையில் இருக்கலாம் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அசாத் அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் திடீர் திடீரென்று மாயமாவதன் அதிர்ச்சி பின்னணி தற்போது வெளியாகியுள்ளது என்றே அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
உறுதி செய்யப்படவில்லை
இதேப்போன்று 5 கல்லறைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரித்தானியர்கள், அமெரிக்க மக்கள் உட்பட சிரிய மக்களும் கொல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பிரித்தானியர்கள் மற்றும் அமெரிக்க மக்களும் அசாத் ஆட்சியில் சிக்கிக்கொண்டார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை.
டமாஸ்கஸ் அருகே Qutayfah மற்றும் Najha பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட கல்லறைகளை ஆய்வு செய்த முன்னாள் அமெரிக்க போர்க்குற்றத் தூதர் ஸ்டீபன் ராப் தெரிவிக்கையில், கண்டிப்பாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100,000 தாண்டும் என்றார்.