;
Athirady Tamil News

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சுக்கு கண்டனம்: எதிர்க்கட்சிகள் அமளியால் நாடாளுமன்றம் தள்ளிவைப்பு

0

டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் விளக்கிய மத்திய அமைச்சர் அமித் ஷா. உடன் மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, ஜே.பி. நட்டா.படம்: பிடிஐ
புதுடெல்லி: சட்ட மேதை அம்பேத்கரை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவமதித்​ததாக நாடாளு​மன்​றத்​தில் எதிர்க்​கட்​சிகள் அமளி​யில் ஈடுபட்டன. இதையடுத்து 2 அவைகளும் நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்டன. அம்பேத்கர் குறித்து அமைச்சர் அமித் ஷா பேசி​யதற்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்தன.

அரசி​யலமைப்பு உருவாக்​கப்​பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்​ததையொட்டி, மாநிலங்​களவை​யில் கடந்த செவ்​வாய்க்​கிழமை விவாதம் நடைபெற்​றது. விவாதத்​தின் முடி​வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசும்​போது, ‘அம்​பேத்​கர்.. அம்பேத்​கர்.. அம்பேத்​கர்’ என முழக்​கமிடுவது இப்போது ஃபேஷன் ஆகிவிட்​டது. இதற்கு பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்​திருந்​தால், சொர்க்​கத்​தில் அவர்​களுக்கு இடம் கிடைத்​திருக்​கும். அம்பேத்​கரின் பெயரை காங்​கிரஸ் எடுத்​துக்​கொள்​வ​தில் பாஜக மகிழ்ச்​சி​யடைகிறது. ஆனால் அவர் மீதான உண்மையான உணர்​வுகள் குறித்​தும் காங்​கிரஸ் பேச வேண்​டும்” என்றார்.

இந்நிலை​யில் அம்பேத்கர் குறித்த மத்திய அமைச்சர் அமித் ஷாவின் பேச்​சுக்கு எதிர்க்​கட்​சிகள் கடும் கண்டனத்​தை தெரி​வித்து வருகின்றன. இதுகுறித்து மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்​தில் கூறும்​போது, “மனுஸ்​மிரு​தியை நம்புவோருக்கு அம்பேத்​கருடன் நிச்​சயம் பிரச்​சினை இருக்​கும்” என்று பதிவிட்​டுள்​ளார்.

இந்நிலை​யில், அம்பேத்கரை மத்திய அமைச்சர் அமித் ஷா அவமதித்து​விட்​டதாக கூறி, நாடாளு​மன்ற வளாகத்​தில் நேற்று காங்​கிரஸ் தலைவர் மல்லி​கார்ஜுன கார்கே, எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்தி தலைமை​யில் பல்வேறு கட்சிகளின் உறுப்​பினர்கள் அம்பேத்​கரின் புகைப்​படத்தை கையில் ஏந்தி போராட்டம் நடத்​தினர்.

இந்நிலை​யில் நேற்று காலை மக்களவை தொடங்​கிய​போது, “ஜெய் பீம், ஜெய் பீம்” என்று எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அவையில் முழக்​கமிட்​டனர். இதனால் பிற்​பகல் 2 மணிவரை தள்ளிவைக்​கப்​படு​வதாக அவைத் தலைவர் அறிவித்​தார். அதன் பிறகும் அமளி தொடரவே அவையை நாள் முழு​வதும் மக்களவை சபாநாயகர் தள்ளி​வைத்​தார்.

இதேபோன்று மாநிலங்​களவை​யிலும் எதிர்க்​கட்சி எம்.பி.க்கள் அமளி​யில் ஈடுபட்​டனர். அப்போது அவையில், மாநிலங்​களவை எதிர்க்​கட்​சித் தலைவரும், காங்​கிரஸ் தேசியத் தலைவருமான மல்லி​கார்ஜுன கார்கே, அம்பேத்​கரின் புகைப்படத்தை எடுத்து உயர்த்திக் காட்​டி​னார். இதையடுத்து அவையில் கூச்​சலும், குழப்​ப​மும் நிலவியது. இதைத் தொடர்ந்து அவையை பிற்​பகல் 2 மணி வரை மாநிலங்​கள​வைத் தலைவர் ஜகதீப் தன்கர் தள்ளி​வைத்​தார். பிற்​பகல் 2 மணிக்கு அவை கூடிய​போது, அமளி தொடர்ந்​த​தால் அவை நாள் முழு​வதும் தள்ளிவைக்​கப்​பட்​டது.

இதற்​கிடையே, அமித் ஷா செய்தி​யாளர்​களிடம் நேற்று கூறிய​தாவது: அம்பேத்கர் குறித்த பேச்​சுக்கு கண்டனம் தெரிவிக்​கும் காங்​கிரஸ் தலைவர், என்னை ராஜினாமா செய்யசொல்​கிறார். பட்டியலின பிரிவைச் சேர்ந்​தவராக இருக்​கும் காங்​கிரஸ் தலைவர் கார்கே, காங்​கிரஸ் கட்சி​யின் மோசமான இந்த முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க கூடாது.

நான் ராஜினாமா செய்​தா​லும், அடுத்த 15 ஆண்டு​களுக்கு நாடாளு​மன்​றத்​தில் காங்​கிரஸ் கட்சி எதிர்க்​கட்​சி​யாகத்​தான் தொடர வேண்​டி​யிருக்​கும். மக்களவை எதிர்க்​கட்​சித் தலைவர் ராகுல் காந்​தி​யின் அழுத்தம் காரண​மாகவே, கார்கே இவ்வாறு பேசி வருகிறார். ராகுல் காந்​தி​யின் அழுத்​தத்​துக்கு நீங்​களும் (கார்கே) பணிந்தது எனக்கு வருத்தம் அளிக்​கிறது.

நாடாளு​மன்​றத்​தில் எனது பேச்சை காங்​கிரஸ் கட்சி​யினர் திரித்​துக் கூறுகின்​றனர். எனது பேச்​சின் ஒரு பகுதியை மட்டும் வைத்து பேசுவதா? அம்பேத்​கரின் கொள்​களைகளை உயர்த்திப் பிடிப்பது பிரதமர் நரேந்திர மோடி தலை​மையிலான பாஜக அரசு​தான். அம்​பேத்​கரின் புகழை உல​கம் ​முழு​வதும் நிலைநாட்​டியது பாஜக அரசு​தான். நாங்​கள் அம்​பேத்​கருக்கு எ​திரானவர்​கள் அல்ல. இவ்​வாறு மத்​திய அமைச்​சர்​ அமித்​ ஷா பேசினார்​.

You might also like

Leave A Reply

Your email address will not be published.