பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி: மின்னணுப்பட்டை அணிய உத்தரவு
ஊழல் வழக்கில் சிக்கி சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸியின் மேல்முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி
பிரான்சின் முன்னாள் ஜனாதிபதியான நிக்கோலஸ் சார்க்கோஸிக்கு, ஊழல் வழக்கொன்றில் மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அந்த மூன்று ஆண்டுகளில், ஓராண்டு தண்டனையை அவர் உடனே அனுபவிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தார் சார்க்கோஸி.
ஆனால், அவரது மேல்முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
அத்துடன், தன் கால்களில் மின்னணு கண்காணிப்புப் பட்டை அணிந்தபடி சார்க்கோஸி ஓராண்டு வீட்டுச் சிறையில் இருக்கவேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இனி அவர் பிரான்சில் எந்த நீதிமன்றத்தையும் அணுகமுடியாது. அத்துடன், மூன்று ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடவும் முடியாது.
இந்நிலையில், தான் ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்துள்ளார் சார்க்கோஸி.