மேற்கத்திய நாடுகள் வழங்கிய பயம்! சூடானில் ரஷ்ய கடற்படை தளம் குறித்து மாஸ்கோ தகவல்
சூடானில் ரஷ்ய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்க பட வாய்ப்பு இல்லை என்று மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமையாது
கடந்த 2019ம் ஆண்டு போர்ட் சூடானில் ரஷ்ய கடற்படை தளம் அமைப்பது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த சூடான் அரசுக்கு மாஸ்கோ S-400 என்ற வான் ஏவுகணை அமைப்பை வழங்கியது. இருப்பினும் சூடான் அரசு இந்த சலுகையை நிராகரித்துள்ளது.
ஆனால் உள்நாட்டு போர் காரணமாக இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு கொண்டு வரவில்லை.
இந்நிலையில், அமெரிக்கா மற்றும் மற்ற மேற்கத்திய நாடுகளின் எதிர்மறையான எதிர்வினைக்கு பயந்து சூடானில் செங்கடலில் ரஷ்ய ராணுவத்தின் கடற்படை தளம் அமைக்கப்பட சூடான் அரசு மறுத்துவிட்டதாக தி மாஸ்கோ டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தகவலை சூடான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.