மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனுக்கு பிடியாணை
2015ஆம் ஆண்டு மத்திய வங்கி பிணைமுறிச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மகேந்திரன் மற்றும் பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சி ஹேவா ஆகியோரை கைது செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
இது தொடர்பான முறைப்பாடு இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் அழைக்கப்பட்டதை அடுத்து, கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
இந்த சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் முன்னர் நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால் முறைப்பாடு அழைக்கப்பட்டபோது, பிரதிவாதிகள் நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், பிடியாணை பிறப்பிக்க உத்தரவிடப்பட்டது.