கைதான முன்னாள் எம்.பி திலீபன் பிணையில் விடுதலை
முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான குலசிங்கம் திலீபன் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மாவட்ட நிதிமோசடி குற்றப்பிரிவினரால் இன்று காலை முன்னாள் எம்.பி திலீபன் இந்த கைது செய்யப்பட்டிருந்தார்.
பிணையில் செல்ல மன்று அனுமதி
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளாரும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈழமக்கள் ஜனநாயக கட்சி (EPDP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளருமான கிறிஸ்டோபர் டினேஸ் அவர்களை நேற்றைய தினம் இரவு வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றப்பிரிவினர் காசோலை மோசடி முறைப்பாட்டில் கைது செய்திருந்தனர்.
அவரின் கைதின் பின்னர் அவர் வழங்கிய வாக்குமூலத்தை தொடர்ந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் இன்று காலை வவுனியா மாவட்ட நிதி மோசடி குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் முன்னாள் எம்.பி திலீபனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரனைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில் இருவரையும் பிணையில் செல்ல மன்று அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது