ஜேர்மன் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த எலான் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தேர்தலில் வெற்றிபெற உதவியதைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளின் அரசியல் குறித்து விமர்சனங்கள் முன்வைக்கத் துவங்கியுள்ளார் உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க்.
அவ்வகையில், ஜேர்மன் அரசியல் குறித்து அவர் முன்வைத்த விமர்சனம் ஒன்றிற்கு, ஜேர்மன் அரசியல்வாதி ஒருவர் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
வலதுசாரிக் கட்சி தொடர்பில் திடீர் செய்தி
உலக கோடீஸ்வரரான எலான் மஸ்க், ஜேர்மனியைக் காப்பாற்ற வலதுசாரிக் கட்சியான Alternative for Germany (AfD) கட்சியால்தான் முடியும் என சமூக ஊடகமான எக்ஸில் தெரிவித்துள்ளார்.
AfD கட்சி, கடுமையான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட கட்சி ஆகும்.
சமீப காலமாகவே, பல நாடுகளில் புலம்பெயர்தல் தொடர்பில் எதிர்மறையான கருத்துக்கள் பரவிவரும் நிலையில், ஜேர்மனியிலும், புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சிக்கு ஆதரவு பெருகிவருகிறது.
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஜேர்மனியை AfD கட்சியால்தான் முடியும் என எலான் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
எலான் மஸ்க் தங்கள் கட்சியான AfD கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதை வரவேற்றுள்ளார் அக்கட்சியின் தலைவரான ஆலீஸ் வீடெல் (Alice Weidel).
எலானுக்கு எக்ஸில் பதிலளித்துள்ள அவர், ஆம், எலான் மஸ்க் அவர்களே, நீங்கள் சொல்வது மிகவும் சரி, தயவு செய்து, ஏஞ்சலா மெர்க்கல் எப்படி எங்கள் நாட்டை நாசமாக்கினார் என்பது போன்ற விடயங்கள் குறித்து நான் ட்ரம்புடன் பகிர்ந்துகொண்ட பேட்டியையும் பாருங்கள் என்று கூறியுள்ளார் அவர்.