பக்கத்து வீட்டுக்காரரின் வேண்டுகோள்: கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து ரூ.44 லட்சம் சம்பாதித்த நபர்
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் ஒருவரின் கதை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபலமான கிறிஸ்துமஸ் தாத்தா வேடம்
எடி ரிச் என்பவர் ஒரு சப்ளை ஸ்டோர் மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
1995 ஆம் ஆண்டில், தனது பக்கத்து வீட்டுக்காரரின் வேண்டுகோளுக்கு இணங்க கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிடத் தொடங்கினார்.
ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்த இந்த விஷயம், நாளடைவில் அவருக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக மாறியது./// கிறிஸ்துமஸ் காலங்களில் இணையத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து நடிக்கத் தொடங்கினார்.
அவரது நகைச்சுவையான பேச்சும் நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்ததால், அவர் பிரபலமடைந்துடன் இதன் மூலம் லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட தொடங்கினார்.
பணி ஓய்வுக்குப் பிறகு என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த எடிக்கு, இந்த கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது.
மகனின் மிகப்பெரிய உதவி
எடி-க்கு அவரது மகன் கிறிஸ் கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கான ஸ்கிரிப்ட்களை எழுதுவது, வீடியோக்களை எடிட் செய்வது போன்ற பணிகளை கவனித்து பெரிதும் உதவி செய்துள்ளார்.
இவ்வாறு கடந்த ஆண்டில் மட்டும் எடியும் கிறிஸும் இணைந்து சுமார் 44 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளனர்.