;
Athirady Tamil News

2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்தும் முன்னணி பிரெஞ்சு வங்கி

0

முன்னணி பிரெஞ்சு வங்கியொன்று 2025-ல் கிரிப்டோ முதலீட்டு சேவையை அறிமுகப்படுத்துகிறது.

பிரான்ஸின் முன்னணி வங்கிகளில் ஒன்றான BPCE நிறுவனம், அதன் துணை நிறுவனமான Hexarq மூலமாக 2025 முதல் தனது வாடிக்கையாளர்களுக்கு (Bitcoin) மற்றும் Crypto முதலீட்டு சேவைகளை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

பிரான்ஸ் நிதி சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான AMF (Autorité des marchés financiers) வழங்கிய PSAN (Prestataire de Services sur Actifs Numériques) உரிமத்தை Hexarq சமீபத்தில் பெற்றுள்ளது.

இதன் மூலம், Hexarq நிறுவனத்திற்கு பிரான்ஸில் டிஜிட்டல் சொத்து (Digital Assets) சந்தையில் சட்டபூர்வமாக செயல்பட அனுமதி கிடைத்துள்ளது.

PSAN உரிமம் கொண்டிருக்கும் Hexarq, கிரிப்டோ சொத்துகளை தக்கவைத்தல், வாங்குதல், விற்பனை செய்தல் மற்றும் பரிமாற்றம் செய்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

பிரான்ஸில் SG Forge வங்கிக்கு அடுத்ததாக PSAN உரிமம் பெற்ற இரண்டாவது வங்கி BPCE ஆகும்.

கிரிப்டோ சேவைகளின் நோக்கம்
வாடிக்கையாளர்களின் நிலைத்தன்மையை பராமரித்து போட்டி நிலையை உயர்த்துவதற்காக இந்த முதலீட்டு சேவைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Banque Populaire மற்றும் Caisse d’Épargne வங்கி வலையமைப்புகளின் வாடிக்கையாளர்களை குறிவைத்து Hexarq உருவாக்கிய செயலியில் இந்த சேவைகள் செயல்படுத்தப்படும்.

பிரான்ஸ் மற்றும் கிரிப்டோ ஒழுங்குமுறை
பிரான்ஸ், யூரோப்பிய ஒன்றியத்தில் MiCA (Markets in Crypto Assets) ஒழுங்குமுறையை அமல்படுத்தும் முன்னோடி நாடாக திகழ்கிறது.

AMF, 2024 ஜூலை 1 முதல் கிரிப்டோ சொத்து சேவை வழங்குநர்களின் உரிமப்பதிவுகளை ஏற்றுக்கொண்டு வருகிறது.

2024 டிசம்பர் 30-ல் MiCA விதிமுறைகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் நிலையில், பிரான்ஸ் கிரிப்டோ ஒழுங்குமுறைகளில் முன்னணி நாடாக திகழ்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.