;
Athirady Tamil News

தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி

0

புத்தளம் நவகத்திகம, ஹல்மில்லவெவ பிரதேசத்தில் 15 வயதுடைய சிறுமி ஒருவர் நேற்று (19) தனது வீட்டில் அரைக்கும் சாதனத்தில் (பிளண்டர்) தேங்காய்த் துண்டுகளை அரைக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நவகட்டகம் ஹல்மில்லவெவ பிரதேசத்தில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையான நடரஞ்சன் நிமல்ஷா திலுனி என்ற சிறுமியே துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்

இந்த சிறுமி கலேவெவ விஜய வித்தியாலயத்தில் 9ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார். கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியில் குடும்பம் வாழ்ந்து வருகிறது. அவர்கள் வசித்த சிறிய வீட்டில் சரியாக உறங்க இடமின்றி தவிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமியின் தாயும் தந்தையும் கூலி வேலை செய்பவர்கள், பெற்றோர் வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்குள் சிறுமி தேங்காயின் ஒரு பகுதியை எடுத்து கறி செய்வதற்காக அரைக்க முயன்றது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேங்காய் விலை அதிகரித்துள்ள நிலையில், கடையொன்றில் இருந்து கொண்டு வரப்பட்ட தேங்காயை சில நாட்கள் பாதுகாப்பதற்காக அரைக்கும் இயந்திரத்தில் வைத்து பொடியாக்கியது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், சிறுமி தேங்காய் துண்டுகளை பொடியாக்க பயன்படுத்திய அரைக்கும் இயந்திரம் மிகவும் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது.

அரைக்கும் இயந்திரத்தில் மேலும் இரண்டு கம்பிகள் பொருத்தப்பட்டு அதனை மின் செருகியில் பொருத்த சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.

அக்கா மின்சாரம் பாய்ந்து சிரமப்படுவதைக் கண்டு அவளது தம்பி ஓடிவந்து பிரதான மின்சுற்றை அணைத்தான், ஆனால் இரவு நேரமாகியதால் இருளுக்கு பயந்து மீண்டும் பிரதான மின்சுற்றை ஒன் செய்தான்.

அதில் சிறுமி பலத்த மின்சாரம் தாக்கி பாதிக்கப்பட்டது பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கூலி வேலைக்குச் சென்ற தந்தையும் தாயும் இதுவரை வீட்டுக்கு வராததால் அக்கம்பக்கத்தினரை சத்தம் போட்டு அழைத்துள்ளதாக அயல் வீட்டார் குறிப்பிட்டுள்ளார்.

அயலவர்கள் வந்து மின்சார கம்பியில் இருந்து சிறுமியை அப்புறப்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதுடன், ஏற்கனவே ஆபத்தான நிலையில் இருந்த சிறுமியை உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செள்வதற்குள் சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.