மனநல திட்டத்தை தொடங்கும் வேல்ஸ் இளவரசர் வில்லியம்-கேட் தம்பதி!
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இணைந்து கிராமப்புற மனநல திட்டத்தை தொடங்குகின்றனர்.
புதிய மனநல திட்டம்
வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசி கேட் இருவரும் நார்போக்(Norfolk) மற்றும் வேவ்னி மைண்ட் (Waveney Mind) நிறுவனத்துடன் இணைந்து சாண்ட்ரிங்காம் எஸ்டேட் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமப்புற சமூகங்களில் வசிப்பவர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய மனநல திட்டத்தை தொடங்குகின்றனர்.
இந்த திட்டம் கிராமப்புறங்கள் மற்றும் விவசாய சமூகங்களுக்கு மனநல ஆதரவை வழங்கும் நோக்கத்தை கொண்டுள்ளது.
இவற்றிக்கு அரச தம்பதியரான வில்லியம் மற்றும் கேட் ஆகியோரால் குறிப்பிட்ட அளவு நிதியளிக்கப்படுகிறது.
முன்மாதிரி திட்டமான இந்த மனநல ஆதரவு திட்டம் 2025ம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு 2 ஆண்டுகள் வரை நீடிக்கும் என தெரியவந்துள்ளது.
இந்த முயற்சி வடமேற்கு நார்போக்கில் உள்ள 1,500 பேர் கொண்ட சமூகத்தில் சுமார் 750 பேர் வரை அடைய குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும்.
அதில் சாண்ட்ரிங்காம் எஸ்டேட்டில் வசிப்பவர்கள் மீது குறிப்பிட்ட கவனம் செலுத்தப்படும்.
இந்த திட்டம் வெற்றி பெற்றால் பிரித்தானியா முழுவதும் உள்ள பிற எஸ்டேட்களிலும் இதை செயல்படுத்த வழிவகுக்கும்.