;
Athirady Tamil News

லண்டனில் வெடித்து சிதறிய மின்சார இருசக்கர வாகனம்: தரைமட்டமான குடும்ப வீடு

0

தென் கிழக்கு லண்டனில் மின்சார இருசக்கர வாகனம் வெடித்ததில் வீடு ஒன்று முற்றிலுமாக அழிந்துள்ளது.

வெடித்த மின்சார இருசக்கர வாகனம்
பிரித்தானியாவின் தென் கிழக்கு லண்டனின் கேட்ஃபோர்டில்(Catford) உள்ள வீட்டில் மின்சார இருசக்கர வாகனம் வெடித்து சிதறி மிகப்பெரிய அழிவை கட்டிடத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவமானது, டிசம்பர் 14-ம் திகதி ரென்ஷா குளோஸில்(Renshaw Close) உள்ள ஒரு வீட்டில் நிகழ்ந்துள்ளது.

கிறிஸ்துமஸ் வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்டுள்ள இந்த துயர சம்பவத்தில் லண்டன் தீயணைப்புத் துறை (LFB) செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இதையடுத்து LFB வழங்கிய தகவலில், பாரம்பரிய சைக்கிளிலிருந்து பேட்டரி பேக் பொருத்தப்பட்டு மாற்றியமைக்கப்பட்ட ஈ-பைக் ஒன்று சார்ஜ் செய்யப்படும் போது வெடித்துச் சிதறி இருப்பதாக தெரியவந்துள்ளது.

பதிவான வீடியோ காட்சிகள்
டோர்பெல்(doorbell) கேமராவின் வீடியோ காட்சிகள் தீயின் வேகமாக பரவும் தன்மையை பதிவு செய்துள்ளன.

அதில், வீடு முழுவதும் தீயால் சூழப்பட்டதையும், 3 குடியிருப்பாளர்கள் எரியும் கட்டடத்திலிருந்து தப்பித்து ஓடிய காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

துரதிர்ஷ்டவசமாக குடியிருப்பாளர் ஒருவர் கூரையிலிருந்து விழுந்து காயமடைந்தார். மற்றொருவர் புகை தாக்கியதால் பாதிக்கப்பட்டுள்ளார்.

லண்டன் தீயணைப்புத் துறை, மின்சார வாகனங்களை சரியாக கையாளாவிட்டால் மற்றும் பராமரிக்காவிட்டால் அவை “மிகவும் ஆபத்தானவை” என்று அறிவுறுத்தியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.