Waymo சாரதி இல்லாமல் இயங்கும் கார்கள் மனிதர்கள் இயக்கும் கார்களைவிட பாதுகாப்பானவை: சுவிஸ் ஆய்வு
கூகுளின் தானாக இயங்கும் கார்கள் என அழைக்கப்படும் Waymo கார்கள், மனிதர்களால் இயக்கப்படும் கார்களைவிட பாதுகாப்பானவை என சுவிஸ் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் ஆய்வு முடிவுகள்
Swiss Re நிறுவனம் மேற்கொண்ட ஆய்வுகள், மனிதர்களால் இயக்கப்படும் கார்களைவிடவும், பிற சாரதி இல்லாமல் இயங்கும் கார்களை விடவும் பாதுகாப்பானவை என தெரிவித்துள்ளன.
25 மில்லியன் மைல்கள் பயணித்தபின்னும் Waymo கார்களால், மனிதர்கள் இயக்கும் கார்களைவிட குறைவான மோதல்களே ஏற்பட்டுள்ளன என்கின்றன ஆய்வு முடிவுகள்.
Swiss Re நிறுவனம், ஒரு காப்பீட்டு நிறுவனம் ஆகும். காப்பீடு கோரல்கள் முதலான தரவுகளின் அடிப்படையில், இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கிடையில், Waymo கார்களின் பாதுகாப்பை உறுதி செய்வது போல, சாரதி இல்லாமல் இயங்கும் Waymo கார் ஒன்று, திடீரென சாலையில் கீழே விழும் ஒருவர் மீது மோதாமல் எப்படி திறமையாக தவிர்த்து விலகிச் செல்கிறது என்பதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.