;
Athirady Tamil News

லண்டனுக்கு 1 மணிநேரத்தில் செல்லலாம்! எலான் மஸ்கின் அதிரடி திட்டம்

0

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், நியூயார்க் நகரில் இருந்து லண்டனுக்கு விரைவில் செல்லும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

சாத்தியக் கூறுகள்
உலகப் பணக்காரரான எலான் மஸ்க் (Elon Musk) பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.

சமீபத்தில் இந்திய தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்கா செல்வதற்கு 40 நிமிடங்களே ஆகும் என கூறி ஆச்சரியப்படுத்தினார்.

அதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக தெரிவித்த அவர், எப்படி செல்வது என்பதற்கான திட்டங்களை தாம் வகுத்து வருவதாகவும் கூறினார்.

1 மணிநேரத்தில் பயணம்
இந்த நிலையில் மீண்டுமொரு அதிரடி திட்டத்தை மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். அதாவது, கடலுக்கு அடியில் பயணித்து அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லண்டன் நகருக்கு செல்லலாம்.

இந்த பயணத்திற்கு ஒருமணிநேரமே ஆகும் என்கிறார் அவர். இந்த திட்டத்திற்காக மஸ்கின் போரிங் நிறுவனம் 20 பில்லியன் டொலர் செலவிட உள்ளது.

அட்லாண்டிக் கடலுக்கடியில் 4,800 கிலோமீற்றர் நீளத்தில் சுரங்கப்பாதை அமைத்து, அதில் அதிவிரைவு ரயில்களை இயக்குவதன் மூலம், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இடையேயான பயண நேரத்தை குறைக்க முடியும் என மஸ்க் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்காவில் இருந்து பிரித்தானியா செல்ல வழக்கமாக 8 மணிநேரம் ஆகும். இதனால் மஸ்கின் திட்டம் வந்தால் பயண நேரம் வெகுவாக குறையும்.

ஆனாலும், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைப்பது மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பில்லாமல் செய்வது மிகவும் சவாலான விடயம்.

எனவே இந்த மஸ்கின் முயற்சி வெற்றி பெற்றால் மனித இனத்தின் மாபெரும் சாதனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.