மின்கம்பி உரசியதில் பேருந்தில் பாய்ந்த மின்சாரம்.., இளம்பெண் மரணம்
டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியபோது மின்கம்பத்தில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இளம்பெண் மரணம்
தமிழக மாவட்டமான ராணிப்பேட்டை, வாணியம்பாடி வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலுக்கு பேருந்தில் சென்றுள்ளனர்.
ஆற்காடு அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது டீ குடிப்பதற்காக பேருந்தை நிறுத்தியுள்ளனர். அப்போதுசாலையோரம் சென்ற உயரழுத்த மின்சாரக்கம்பி பேருந்தின் மேல் தளத்தில் உரசியதாக தெரிகிறது.
இதனால் பேருந்து முழுவதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அப்போது, பேருந்தில் பயணித்த அகல்யா (18) என்ற இளம்பெண் கீழே இறங்க முயன்றுள்ளார்.
அவர், பேருந்தின் கம்பியை பிடித்து கீழே இறங்கிய போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரை காப்பாற்ற சென்று இருவரையும் மின்சாரம் தாக்கியது.
இந்த சம்பவத்தை அறிந்த பொலிஸார் விரைந்து வந்து அகல்யாவை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காலணி அணியாமல் பேருந்தில் இருந்து இறங்கியபோது மின்சாரம் தாக்கியதாக அவருடன் இருந்த பெண் கூறியுள்ளார்.