மணமகளுக்காக 55 லட்சம் செலவிட்ட நபர்: கடைசியில் காத்திருந்த ஏமாற்றம்
சீனாவில், இணையத்தில் சந்தித்த ஒரு பெண்ணுக்காக 55 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார் ஒருவர்.
அந்தப் பெண் தன்னைத் திருமணம் செய்துகொள்வார் என நம்பியிருந்த நிலையில், அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.
மணமகளுக்காக 55 லட்சம் செலவிட்ட நபர்
சீனாவின் Hubei என்னுமிடத்தைச் சேர்ந்த Shin என்னும் நபர், திருமணத்துக்காக பெண் தேடிக்கொண்டிருந்திருக்கிறார்.
இணையத்தில் வந்த ஒரு விளம்பரத்தின்படி, திருமண ஏற்பாடு செய்யும் ஒரு அமைப்பில் Shaoyu என்னும் பெண்ணை சந்தித்துள்ளார் அவர்.
கொஞ்சம் நாட்களில் இருவரும் பழகத் துவங்க, தங்கள் மரபுப்படி, தனக்கு மணமகன் 22 லட்ச ரூபாய் தரவேண்டும் என Shaoyu கூற, Shin அதற்கு சம்மதித்துள்ளார்.
பின்னர் தன் சகோதரிக்கு திருமணப் பரிசு வாங்கவேண்டும், தாய்க்கு உடல் நலமில்லை என ஏதேதோ காரணங்கள் கூறி சுமார் 55 லட்ச ரூபாய் வாங்கியுள்ளார் Shaoyu.
தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண் தானே என்று எண்ணி Shinம் பணம் கொடுத்துள்ளார்.
ஆனால், ஒரு கட்டத்தில் மணமகளை நேரில் சந்திக்கவேண்டும் என Shin கூற, பெண்ணை நேரில் பார்த்த Shinக்கு அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
புகைப்படத்தில் பார்த்த பெண்ணுக்கும் நேரில் பார்த்த பெண்ணுக்கும் சம்பந்தமே இல்லையாம். விவாதங்கள், விளக்கங்கள் என கடைசியில் ஏதேதோ சொல்லி சமாளித்திருக்கிறார் அந்தப் பெண்.
இதற்கிடையில், ஒரு நாள், Shinஐ ஒரு பெண் தொடர்பு கொண்டு, தான் மணப்பெனண்ணின் அக்கா என்றும், இந்த திருமண சம்பந்தம் வேண்டாம், இதை முடித்துக்கொள்வோம் என்று கூற, Shinக்கு ஏற்கனவே இருந்த சந்தேகம் வலுத்துள்ளது.
என்னதான் நடக்கிறது என்று கண்டுபிடிப்பதற்காக Shin களமிறங்க, Shaoyuயும், அவரது அக்கா என்று கூறிய பெண்ணும் ஒரே ஆள்தான் என்பதும், Shaoyuக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருப்பதும் தெரியவந்துள்ளது.
Shaoyu தனது குடும்பத்தினரின் செலவுக்கு பணம் வேண்டும் என்பதற்காக, தன் குடும்பத்தினர் உதவியுடனேயே இப்படி ஒரு திருமண நாடகம் ஆடியுள்ளார் என்பதையறிந்து அதிர்ச்சியடைந்த Shin பொலிசாரிடம் புகாரளித்துள்ளார்.
இதற்கிடையில், Shinஉடைய கதையைக் கேட்ட இணையவாசிகள், திருமணம் என்னும் நம்பிக்கையை வைத்து இப்படியெல்லாமா ஏமாற்றுவார்கள் என தங்கள் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன், அந்தப் பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.