அநுரவின் முடிவை பாராட்டியுள்ள ரணில்
ரணில் ஆரம்பித்த பொருளாதார திட்டங்களில் அநேகமானவற்றை , அநுர அரசு மாற்றாமல் தொடர்வது சிறப்பு, இதனை பாராட்டுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முதல் இலங்கை அரசியலில் , அநேக அரசுகள் ஒரு அரசு கொண்டு வந்த திட்டங்களை , அடுத்து வரும் அரசு தொடராமல் இன்னொரு திட்டத்தை அமுல்படுத்துவது தொடர் கதையானது.
முன்னைய அரசின் நல்ல திட்டங்களை தொடர்வது இழுக்கு அல்ல, அதுவே சரியான வழி முறை. சில புதிய வழிமுறைகள் அதனோடு இணையும் போது நாட்டுக்கே சிறப்பாகிவிடும்.
பொதுவாக மேற்கத்திய / ஐரோப்பிய நாடுகளில் புதிய ஒரு அரசு ஒன்று பதவிக்கு வந்தால் அதை இயங்க விட்டு, எதிர்கட்சிகள் அமைதியாக இருக்கும். தேர்தல் காலம் வரும்போதே களத்தில் இறங்குவதாக சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.