;
Athirady Tamil News

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி அநுர

0

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayaka), எதிர்வரும் ஜனவரி நடுப்பகுதியில் சீனாவுக்கு (China) செல்லவுள்ளதாக தெகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில், இன்று (21) செய்தியாளர்களிடம் தெரிவித்த அநுரகுமார, தனது பயணத்துக்கான திகதி குறித்து குறிப்பிடவில்லை என்று வெளிநாட்டு செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

நீண்ட காலமாக தாமதமாகி வந்த வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பை முடித்த சில நாட்களின் பின்னர் இந்த பயணம் இடம்பெறுகிறது.

இருதரப்பு கடன்
இலங்கையின் இருதரப்பு கடனில் பாதிக்கும் மேலானது சீனாவிடம் பெற்றுக்கொண்ட கடனாகும் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஜனவரியில் சீனாவிற்கு விஜயம்
இந்தநிலையில், அடுத்த மாத நடுப்பகுதியில் தான் சீனாவுக்குச் செல்வேன் என்று ஜனாதிபதி அநுரகுமார கூறியதாக குறித்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.

அரச தலைவராக ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டு பயணம், 2024 டிசம்பர் 16ஆம் திகதி அன்று இடம்பெற்றது.

பிராந்திய அதிகார மையமான இந்தியா, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்த சீனாவுடன் கடுமையாகப் போட்டியிடுகிறது.

அத்துடன், இலங்கையில் பீய்ஜிங்கின் வளர்ந்து வரும் பிடியைப் பற்றி புதுடில்லி கவலை கொண்டுள்ளதாகவும் அந்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.