;
Athirady Tamil News

ஷேக் ஹசீனா ஆட்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் : இந்தியா மீது வங்கதேசம் கடும் குற்றச்சாட்டு

0

வங்க தேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது காணாமல் ஆக்கப்பட்டடோர் சம்பவங்களில் இந்தியாவிற்கு தொடர்பிருப்பதை அந்நாட்டு அரசு கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹனீசா ஆட்சிக்காலத்தில் அரசுக்கு எதிரான கருத்துக்களை கொண்ட பலர் காணாமல் போன நிலையில் அவர்களுக்கு என்ன ஆனது என்ற தகவல்கள் இன்று வரை தெரியவரவில்லை.

கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி முடிவுக்கு வந்த பின் சிறையில் இருந்து விடுதலையான அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.

காணாமல் ஆக்கப்பட்டோர்
ஷேக் ஹசீனா ஆட்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட ஆணையத்தை யூனுஸ் தலைமையிலான அரசு அமைத்தது.

இந்தநிலையில், ஷேக் ஹசீனாவின் ஆட்சியின் போது எதிர் கருத்து உடையவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்களில் இந்தியாவின் தொடர்பு இருப்பதை அந்த குழு கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆணையத்தின் அறிக்கைப்படி, காணாமல் போனவர்களில் சிலர் இன்னும் இந்திய சிறைகளில் இருக்கலாம் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் இரு நாடுகளுக்கு இடையே நடந்த கைதிகள் பரிப்புமாற்றம் குறித்த புலனாய்வுத் தகவல்களை கண்டறிந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இன்னும் சிறையில் இருக்கும் வங்கதேச குடிமக்களை அடையாளம் காண வங்கதேச வெளியுறவு மற்றும் உள்துறை அமைச்சகங்களை ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,500 இற்கும் மேல் இருக்கும் என ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.