இத்தாலிக்கான தூதரை அறிவித்த ட்ரம்ப்: 50,000 பேருக்கு வேலை கொடுத்தவர்..யார் அவர்?
Houston Rockets உரிமையாளரை இத்தாலிக்கான அமெரிக்க தூதராக டொனால்ட் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
இத்தாலிக்கான தூதர்
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து டொனால்ட் ட்ரம்ப் அமைச்சர்கள் மற்றும் தூதர்களை நியமித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது இத்தாலிக்கான தூதரையும் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்ரம்ப் வெளியிட்ட அறிவிப்பில்,
‘டில்மன் ஜே.ஃபெர்டிட்டாவை இத்தாலிக்கான அமெரிக்கத் தூதராகப் பணிபுரிய பரிந்துரைக்கப்பட்டுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்’ என தெரிவித்துள்ளார்.
டில்மன் ஜே.ஃபெர்டிட்டா (Tilman J.Fertitta) NBA அணியின் Houston Rocketsன் உரிமையாளர் ஆவார்.
10.9 பில்லியன் டொலர்
திறமையான தொழிலதிபரான இவர், அமெரிக்காவின் முதன்மையான பொழுதுபோக்கு மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றை நிறுவி கட்டமைத்துள்ளார். சுமார் 50,000 அமெரிக்கர்களை பணிக்கு அமர்த்தியுள்ளார் எனவும் கூறியுள்ளார்.
மேலும், டில்மேன் Houston பல்கலைக்கழகத்தின் ரீஜண்ட் வாரியத்தின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஃபோர்ப்ஸ் மதிப்பின்படி 10.9 பில்லியன் டொலர்கள் மதிப்புடையவர் டில்மேன் (67) என தெரிகிறது.