;
Athirady Tamil News

கசிப்பு உற்பத்தி சந்தேக நபர் கைது-சவளக்கடை பொலிஸ் பிரிவில் சம்பவம்

0

கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றினை நீண்ட கால காலமாக நடாத்தி வந்த சந்தேக நபரை சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் சவளைக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரச்சோலை அரசினர் தமிழ் கலவன் பாடசாலைக்கு பின்னால் சூட்சுமமான முறையில் நடாத்தி செல்லப்பட்ட கசிப்பு உற்பத்தி நிலையத்தை கடந்த சனிக்கிழமை(21) இரவு சம்மாந்துறை விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சுற்றிவளைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன் போது மிக சுட்சுமமான முறையில் குறித்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நடாத்தி சென்ற 50 வயதுடைய சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 80,000 மில்லி லிட்டர் கசிப்பு 170,000 மில்லி லிட்டர் கோடா, 130,000 மில்லி லிட்டர் வடி, 210 லிட்டர் இரும்பு பரள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

மேலும் சம்மாந்துறை வீரமுனை 03 பகுதியைச் சேர்ந்த கைதான குறித்த சந்தேக நபர் வசம் இருந்து சுமார் ரூபாய் இரண்டு இலட்சம் பெறுமதியான கசிப்பு உற்பத்தி உபகரணங்களும் மீட்கப்பட்டு சந்தேக நபர் உட்பட சான்று பொருட்கள் யாவும் சவளைக்கடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை றிப்பிடத்தக்கது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளைக்கடை பொலிஸார் மேற்கொண்டு சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இக் கைது நடவடிக்கையானது சம்மாந்துறை விசேட அதிரடிப்படை உப பொலிஸ் பரிசோதகர்களான எம்.ஜி.ஏ.கே. ஜெயஸ்ரீ மற்றும் ஓ.வி.கே.டி. விஜயஸ்ரீ தலைமையில் விசேட அதிரடிப்படை குழுவினர் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.