பிரித்தானியாவிற்குள் புலம்பெயர் மக்களைத் தடுக்க கூடுதல் நிதி கோரும் பிரான்ஸ்
பிரித்தானியாவிற்கு புலம்பெயரும் மக்களைத் தடுக்க பிரான்ஸ் கூடுதல் நிதி கோருகிறது.
ஆங்கிலக் கால்வாயில் புலம்பெயர் மக்களைத் ந்தோர் நுழைவதைத் தடுக்க பிரித்தானியாவிடமிருந்து மேலும் நிதி கோர திட்டமிட்டு இருப்பதாக பிரான்சின் உள்துறை அமைச்சர் புருனோ ரெடிலியோ (Bruno Retailleau) அறிவித்துள்ளார்.
Calais-ல் புதிய பொலிஸ் நிலையம் அமைக்கவும் பிரான்ஸ் கடலோரத்தில் பொலிஸாரின் ரோந்து பணியை அதிகரிக்கவும் பிரித்தானியாவின் நிதி உதவி தேவைப்படுவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய பாதுகாப்பு படையணிக்கு மேலும் 175 பேர் சேர்க்கப்படவுள்ளதால், பாதுகாவலர்களின் எண்ணிக்கை 800-ஆக அதிகரித்துள்ளது.
Calais மற்றும் Dunkirk நிலைமை மோசமாக உள்ளதாக கூறிய ரெடிலியோ, புலம்பெயரும் மக்களால் ஏற்படும் சேதத்தை சரி செய்ய ஒரு இழப்பீடு நிதி உருவாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவின் நிலைப்பாடு
கடந்த ஆண்டு, பிரித்தானியா 500 மில்லியன் பவுண்ட்ஸ் பிரான்சுக்கு வழங்கி, புலம்பெயரும் மக்களைத் தடுக்க காவல்துறை நடவடிக்கைகளை பலப்படுத்தியது.
எனினும், இவ்வாண்டு மட்டும் 35,040 புலம்பெயர்ந்தோர் பிரான்சிலிருந்து சிறிய படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவிற்குள் நுழைந்துள்ளனர்.